474. தியாகங்களுக்கு நாம் தகுதியானவர்கள் தானா? - கி அ அ அனானி
கி.அ.அ.அனானி கூறியிருக்கும் கருத்துகளோடு 100% ஒத்துப் போகிறேன். கீழே நான் கொடுத்துள்ள சுட்டியில் உள்ளதை வாசித்து விட்டு கி.அ.அ.அ மேட்டரை வாசித்தால், அவர் கோபத்தில் உள்ள நியாயம் புரியலாம் !
தாஜ் ஹோட்டலில் 24 மணி நேரம்
எ.அ.பாலா
*********************************************
நேற்று மும்பை தீவிரவாதிகளுக்கு எதிராக நடந்த அதிரடித் தாக்குதலில் உயிரிழந்த ஹேமந்த் கர்காரே, விஜய் சலாஸ்கர் , அஷோக் காம்தே மற்றும் முகம் தெரியாத அந்த காவலர்களைப் பற்றி செய்தி கேள்விப்பட்ட போது நெஞ்சம் கனத்தது।அதுவும் தொலைக்காட்சியில் தீவிரவாதிகளை எதிர்க்க,வாழ்க்கையில் கடைசி முறையாக தன் கடமையை நிறைவேற்ற அவசர அவசரமாக பாதுகாப்பு உடை அணிந்தபடியே ஓட்டமும் நடையுமாக செல்லும் ஹேமந்த் கர்காரே மற்றும் சலாஸ்காரின் நிழல் படத்தைப் பார்க்கும் போது துளிர்த்த கண்ணீரை கட்டுப் படுத்த முயலவில்லை என்பதை சற்று கர்வத்துடனேயே சொல்லிக் கொள்கிறேன்.அவர் போன்ற கடமை வீரர்களின் வீரதீரங்களுக்கு நான் தலை வணங்கி அஞ்சலி செலுத்திக் கொள்கிறேன். I Salute their Bravery & Valour.
ஆனால் இதைச் சொல்லும் அதே சமயத்தில் இது போன்ற வீரத் தியாகங்களை மதிக்கத் தெரியாதவர்கள் நாம் என்பதும் கசப்பான உண்மை.மக்கள் தொகையில் உலகிலேயே இரண்டாவது பெரிய நாடாகிப் போனதாலேயோ என்னமோ நமக்கு சக மனிதர்களின் மேலுள்ள மதிப்பு குறைவு என்பதுதான் கசப்பான உண்மை. சுடப்பட்டு இறந்த காவலர்களின் உடல்களை இழுத்தும் தூக்கியும் அப்புறப் படுத்திய விதம் பார்க்கும் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும்.அது போலவே இந்தக் காவல் அதிகாரிகளின் வீர தீரச் செயல்கள் சில நாட்களில் மறக்கப் பட்டுவிடும்.
2 மாதம் கழித்து இப்படி கடமைக்காக உயிர் விட்டவர்களின் குடும்பங்களின் நிலை என்ன என்பது பற்றி யாராவது யோசிப்போமா?கார்கிலில் உயிர் நீத்த ராணுவ வீரர்களின் தகப்பன்களும், மனைவிகளும் அறிவிக்கப் பட்ட வேலைக்காகவும் மானியத்தொகைக்காகவும், நிலப்பட்டாவுக்காகவும் அலையும் அவலம் இன்றும் நடப்பது நம்மில் எவ்வளவு பேருக்குத் தெரியும் ?அதைப் பற்றி எவ்வளவு பேர் வருத்தப் பட்டிருப்போம்? மீண்டும் வெட்கத்துடனும் வேதனையுடனும் சொல்கிறேன் "வீரத் தியாகங்களை மதிக்கத் தெரியாதவர்கள் நாம்".
என்று நாம் "உண்மை" வீரத்தையும், தியாகத்தையும் மதிக்கக் கற்றுக் கொள்கிறோமோ அன்றுதான் 100 கோடிக்கு மேல் மக்கள் தொகை கொண்ட நாட்டில் ஒன்றல்ல ஓராயிரம் கர்காரேக்களும், சலாஸ்கர்களும், காம்தேக்களும் தோன்றுவார்கள்.
என்று நாம் தியாகத்தின் மதிப்பு தெரிந்து கொள்கிறோமோ அன்று மனித உயிரின் மதிப்பும் புரியும் .அப்போதுதான் உயிரைப் பறிக்கும் இது போன்ற தீவிரவாதத்திற்கெதிராக ஒருமித்த குரல்கள் உரக்க ஒலிக்கும். தீவிரவாதத்துக்கு துணை போகாமலும், பயந்து ஒதுங்காமலும் தைரியமாய் எதிர்க்கும் குணம் நம்மில் வளரும்.
."கடலைகளை எறிந்தால் குரங்குகள்தான் வரும்"-If you throw pea-nuts you will only get Monkeys என்பது கார்பரேட் வட்டாரங்களில் வேலைக்கு திறமையான ஆட்கள் கிடைப்பது பற்றி ஒரு சொலவாடை. இந்தத் தருணத்தில் அதுதான் ஞாபகம் வருகிறது. நாம் எப்போது தியாகத்தை உதட்டளவில் இல்லாது உண்மையாக மதிக்கிறோமோ அப்போதுதான் சட்டக் கல்லூரியில் பழிவாங்கலுக்காய் "மனிதர்கள்- மனிதர்களை" வெறி பிடித்த மிருகங்களைப் போல் வேட்டையாடிக் கொண்டிருந்த போது ,தடுக்கும் அதிகாரம் இருந்தும் கை கட்டி வாளாதிருந்த மந்திகள் கிடைக்காமல் நமக்கு அநியாயத்தை தைரியமாய் எதிர்க்கும் மனிதர்கள் காவலர்களாய் கிடைப்பார்கள்।
By
கி அ அ அனானி
12 மறுமொழிகள்:
Salutations to our ARMED Forces !!!
என்னவோ அவர்களின் இறுதி ஊர்வலத்தைப் பார்த்த போது மனதில் தோன்றியது - அது டிவி என்று தெரியும்தான், இருந்தும் கையெடுத்துக் கும்பிட்டேன்.
அன்புள்ள பாலா அவர்களுக்கு
நன்றி
கி அ அ அனானி
கடந்த இரு தினங்களாக போலி செக்யூலரிஸ்ட்களின் தொடர் மௌனம் செவிப்பறையை கிழிப்பதாக இருக்கிறது...
தீவிரவாதிகள் தாஜ் ஓபராய் ஹோட்டல்களில் பதுங்கியிருந்தது போல் இவர்களும் எங்காவது ஒளிந்திருக்கிறார்களா?
உயிரிழந்த காவலர்,பொதுமக்களுக்காக வருத்தம் தெரிவிக்க யோசிப்பார்கள்... ஒரு வாரம் கழிந்த பின் தீவிரவாதிகளின் மனித உரிமை பற்றி அங்கலாய்க்க பாய்ந்து வருவார்கள்.. தீவிரவாதத்தினால் செத்தவருக்கு மனித உரிமை என்பது கிடையாது... என்ன மாதிரி ஜந்துக்கள் இந்த போலி செக்யூலரிஸ்ட்கள் :-(
நல்ல பதிவு.
நமக்காய் உயிர் துறக்கும் அஞ்சாநெஞ்சம் கொண்ட இந்த வீரர்களுக்கு ஒரு சல்யூட்
தருமி போன்ற பிராமண காழ்ப்பாளர்களுக்கும் தேசப் பற்று ஏற்பட்டிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. தருமி அவர்களே தேசப் பற்று என்பது சகமனிதர்களை காழ்ப்புணர்வுடன் அணுகாமல் இருப்பதிலும் இருக்கிறது என்பதை இப்பொழுதாவது உணர்ந்து கொள்ளுங்கள். நீங்கள் மனமார வெறுக்கும் பிராமணர்கள் கூட நீங்கள் கண்ணீர் விட்ட அந்த கமாண்டோக்களில் ஒருவராக இருக்கலாம். வெறுப்பை ஒழியுங்கள். அப்புறம் இது போன்ற முதலைக் கண்ணீரை வடிக்கலாம்
//தருமி போன்ற பிராமண காழ்ப்பாளர்களுக்கும் தேசப் பற்று ஏற்பட்டிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.
//
தருமி அவர்கள் இடஒதுக்கீட்டை ஆதரிப்பாதாலே அவரை பிராமண காழ்ப்பாளர் என்று சொல்வதை ஏற்க இயலாது. தனிப்பட்ட அளவில் அவரை எனக்குத் தெரியும். மேலும், அவர் இந்திய தேசியத்தை வெறுப்பவர் இல்லை என்பது என் எண்ணம்.
புரொபசர்,
தங்கள் உணர்வை மதிக்கிறேன் !
கி.அ.அ.அ,
நான் தான் சிறப்பான இந்த பதிவுக்கு உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.
கி.அ.அ.அ ரசிகர் மன்றம்,
போலி செக்யூலிரிஸவியாதிகளைப் பற்றி சொல்ல ஒன்றுமில்லை !!!
அனானி,
உணர்வு பகிர்தலுக்கு நன்றி.
அனானியின் மறுமொழி (கீழே) எடிட் செய்யப்பட்டுள்ளது.
எ அ பாலா
***************************
எ அ பாலா
உங்களுக்கு தருமியைத் தெரிந்த லட்சணம் அவ்வளவுதான். திராவிட ... (edited) என்று இணையத்தில் பிராமண எதிர்ப்பை வளர்த்த ...(edited) கும்பலின் தலைவராகச் செயல் பட்டவர் இவர். இவரது அனைத்துப் பதிவுகளையும் படித்து விட்டுப் பேசுங்கள். ...(Edited)
It is pure nonsense to condemn Dharumi. He is not a Brahmin hater. I say this with all conviction.
Regards,
dondu N. Raghavan
இந்தப் பதிவில் எதற்கு இந்த தர்க்கம். அதற்கு என்று ஒரு பதிவு வேண்டுமானால் நானே போடுகிறேன். அனானியார் அங்கு வந்து சாடட்டும்.
இப்பதிவின் நோக்கம் சிதையாமல் காப்போமா? please
//இப்பதிவின் நோக்கம் சிதையாமல் காப்போமா? please
//
பதிவுக்கு தொடர்பில்லாத பின்னூட்டங்கள் இட வேண்டாம், நன்றி.
Post a Comment